சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதற்கிடையில் நேற்று கரோனாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, "மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்" என தெரிவித்திருந்தார்.
மோடியின் இந்த அறிவிப்பால் நாளை நள்ளிரவு 12 மணிமுதல் ஞாயிறு இரவு 10 மணிவரை பயணிகள் ரயில்கள் ஓடாது என்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறு அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும் என்றும் பிடிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறன்று பேருந்துகள் ஓடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.