Skip to main content

வருது கரோனா பரிசோதனை மையம்... அனைவருக்கும் பரிசோதனை... கலெக்டர் அறிவிப்பு

Published on 19/04/2020 | Edited on 20/04/2020


திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளாக 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இதுவரை 10 பேர் குணமாகியுள்ளனர். ஒருவர் வீட்டுக்கு அனுப்பபட்டார், மற்ற 9 பேர் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இரண்டு பேர் மட்டும் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

tiruvannamalai collector


இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1091 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 767 நபர்களுக்கு நெகட்டிவ் என்றும் 12 பேருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. மற்றவர்களுக்கு இன்னும் வரவில்லை.


கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என நமது மாவட்டத்தில் 10 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நமது மாவட்டத்துக்கு வந்துள்ள ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலமாக இந்த 10 இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு முதல் கட்டமாக டெஸ்ட் எடுக்கப்படவுள்ளன. அதன்பின்னர் பரவலாக எடுக்கப்படவுள்ளன. இதில் வரும் ரிசல்ட்டை பொருத்து கரோனா டெஸ்ட் எடுக்கலாமா வேண்டாமா என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். ரேபிட் கிட் மூலமான டெஸ்ட் முடிவுகள் சில நிமிட நேரங்களில் தெரிந்துவிடும். இந்த டெஸ்ட் எடுக்கப்படும் பொழுதே சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.
 

http://onelink.to/nknapp


நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு மருத்துவ மாவட்டங்கள் உள்ளன. திருவண்ணாமலை மருத்துவ மாவட்டம், செய்யார் மருத்துவ மாவட்டம். இந்த இரண்டு மருத்துவ மாவட்டங்களில் திருவண்ணாமலை மருத்துவ மாவட்டத்தில் எடுக்கப்படும் ரத்தங்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், செய்யார் மருத்துவ மாவட்டத்தில் எடுக்கப்படும் ரத்தங்கள் சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கும் அனுப்பபடுகின்றன. இதுவரை அங்குதான் கரோனா வைரஸ் பாதித்துள்ளதா எனப் பரிசோதனை நடைபெற்று முடிவுகள் வந்தன. இனி அந்தப் பரிசோதனை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை நமது மாவட்டத்திலேயே நடைபெறும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.