ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.இதனால் சிலர் டாஸ்டாக் கடைகள் மூடப்படுவதற்கு முன்பே பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கிப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர்.அதுவும் தீர்த்து போனதால் தற்போது மது பிரியர்கள் தங்களுக்கு மது கிடைக்காதா எனச் சுற்றித் திரிந்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/901_4.jpg)
இந்த நிலையில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகத் தகவல் கிடைத்தால் அதனை ஒருவர் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.ஊரங்டகு என்பதால் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தனது வாகனத்தில் வரும்போது, சாலையில் செல்பவர்களை எங்குச் செல்கிறீர்கள்.தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என அட்வைஸ் செய்து கொண்டிருந்தபோது,சந்தேகப்படும்படி ஒரு நபர் வந்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை விசாரித்துள்ளார்.
அப்போது அவரது கையில் சாராயப்பாட்டில் இருந்துள்ளது.இது எங்கு கிடைத்தது? எவ்வளவு கொடுத்து வாங்கினீர்கள்? என்று விசாரிக்கும்போது,ராம்ஜி நகரில் ஒரு லிட்டர் பாட்டில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார். வாங்கிய இடத்தைக் காட்டு என அந்த நபரைப் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் போலீசார்.
அப்போது அங்கிருந்த பெண்மணி ஒருவரிடம் போலீசார் விசாரித்தபோது,தனது கணவர் குடிப்பழக்கம் உள்ளவர்.அவரால் குடிக்காமல் இருக்க முடியாது என்பதால் நானே காய்ச்ச ஆரம்பித்தேன் எனக் கூறியிருக்கிறார்.இதற்கான மூலப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என விசாரித்தபோது,காலையில் கடைகளுக்குச் சென்று வாங்கி வருவேன் எனவும்,அதிகமாகக் கணவர் குடிக்க ஆரம்பித்ததால் வீட்டில் உள்ள சாராயத்தை விற்றதாகத் தெரிவித்திருக்கிறார்.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அந்தப் பெண்மணியை எச்சரித்துவிட்டு,அவர்களிடம் பாட்டில்களில் இருந்த சாராயத்தைக் கீழே ஊற்றிவிட்டுச் சென்றனர் போலீசார்.
-மகேஷ்
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)