உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 536லிருந்து 562 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்தியர்கள் 519 பேருக்கும், வெளிநாட்டினர் 43 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 11 பேர் ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

Advertisment

  corona virus - Tamilnadu -cm Edappadi Palaniswami - pm modi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்துக்கு ஏற்கனவே மத்திய அரசால் 987.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.