கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியே வராமல் தனித்திருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் வீடற்றவர்கள், சாலையோர தொழிலாளர்கள் தற்போது வேலை கிடைக்காமலும், உணவுக்கு கடும் சிரமப்பட்டும் வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இவர்களின் நிலைமையைச் சமூக ஆர்வலர்கள் அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். அரசும் அம்மா உணவங்களில் கூடுதல் உணவுகளைச் சமைக்க சொல்லியதுடன், அம்மா உணவத்திற்கு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் பகுதியில் சாலையோர தொழிலாளர்களுக்கு ராணுவ போலீசார் உணவு அளித்து உதவினர்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/ss21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/ss22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-03/ss23.jpg)