கரோனா தொற்று விரைவு பரவலையடுத்து தொற்றுகண்டவர்கள், அவர்கள்மூலமாகபாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்கள் ரத்தப் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். இந்தசோதனை முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கின்றன. அதற்குள் தொற்று மேலும் பலருக்குபரவும் அபாயசூழல் இருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_288.jpg)
எனவே கரோனா சோதனையை விரைவு படுத்தும் வகையில், சீனாவிலிருந்து இந்தியா, ரேபிட் கிட் பாக்ஸ் எனப்படுகிற அதிவேக பரிசோதனைகருவியை வரவழைத்தது. அதில் சுமார் 12 ஆயிரம் சோதனைக் கருவிகள் தமிழகம் வந்ததில் நெல்லை மாவட்டத்திற்கு ஆயிரம் ரேபிட்கிட் கருவிகள் வந்தன. அதன் மூலம் முதல் சோதனையை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் கரோனா பரிசோதனையை ஆரம்பித்து வைத்தார் நெல்லை கலெக்டர் ஷில்பா.
முதன்முதலாக நெல்லை பகுதியில் 36 பேருக்கு கரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டது. அவர்கள் மூலம் 170 பேர்கள் தொடர்பிலிருந்ததைக் கண்டறிந்ததில் 20 பேருக்குப் பாசிட்டிவ் எனதெரியவந்தது. இதன் மூலம் இரண்டு நாட்களுக்கு முன்புவரை 60 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர், இதில்23க்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சோதனையில் இந்த ரேபிட்கிட் கருவியில் நெகடிவ் என்று வந்தால் அவர்களுக்கு மேற்கொண்டு வேறு பரிசோதனை தேவையில்லை. பாசிட்டிவ் என்று வருமேயனால் சம்பந்தப்பட்ட நபருக்கு நோய் உள்ளதா என்று நெல்லை அரசு மருத்துமனையில் பி.சி.ஆர். மூலம்மறு பரிசோதனை எடுக்கப்படும். அதில் அவருக்குபாசிட்டிவ் என வந்தால் மட்டுமே அவர்நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார். ரெட் அலர்ட்டிலுள்ளநெல்லை மாவட்டத்தின் களக்காடு, பத்தமடை, பேட்டை டவுண்கோடீஸ்வரன் நகர், பாளை கே.டி.சி. நகர், டார்லிங் நகர், கிருஷ்ணாபுரம், வள்ளியூர், மேலப்பாளையம் என 9 இடங்கள் கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_222.gif)