Advertisment

வெளியூர் போக அனுமதிச் சீட்டு பெற போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்... 

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவினால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வசிப்போர் பிற மாவட்டம், மாநிலம் என எங்கும் செல்ல முடியவில்லை.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திருமணம், உறவினர் இறப்பு மற்றும் மருத்துவம் தொடர்பாக, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோர், சென்னை மாநகர காவல் துறை சார்பில் திறக்கப்பட்டுள்ள அவசர கால சிறப்பு கட்டுப்பாடு அறையில் அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த அனுமதிச் சீட்டு பெறும்போது எந்தக் காரணத்திற்காக ஊருக்குப் போகிறோம் என்ற ஆவணங்கள் மற்றும் கோரிக்கை கடிதத்தை அளிக்க வேண்டும். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு பெற பலர் குவிந்தனர்.

அனுமதி சீட்டு பெற, 75300 01100 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., மற்றும், 'வாட்ஸ் ஆப்' செயலியில் தகவல் அனுப்பலாம். மேலும், gcpcorona 2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Chennai police commissioner office ticket permission corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe