/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/618_3.jpg)
கரோனாவில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நேரத்தில், பலரின் விரயப் பொழுதைப் பயனுள்ளதாக மாற்றியிருக்கிறது திருப்பூர் மாவட்ட வரலாற்றுச் சுவடுகள் அமைப்பு.
இந்த அமைப்பு, பழந்தமிழ் சிற்பங்களைப் பற்றியும் அவற்றின் நுணுக்கங்கள் பற்றியும், அவை சொல்லும் கதைகள் பற்றியும் போதிக்கும் பயிலரங்கை வாட்ச் அப் மூலமே விறுவிறுப்பாக நடத்திவருகிறது.
இந்த முயற்சி பற்றி, வரலாற்றுச் சுவடுகள் அமைப்பினரிடம் நாம் கேட்டபோது, இப்படியொரு பயனுள்ள பயிலரங்கை நடத்துவது பற்றி, அமைப்பின் தலைவரான திருப்பூர் முடியரசும், பூ.சா.கோ முன்னாள் கல்வெட்டியல் மாணவர்களான மருத்துவர் உதய சங்கர், ஆசிரியை பௌசியா இக்பால், கணினி பொறியாளர் பாபு மனோ, ஆசிரியை கலைச் செல்வி, சஞ்சு ராஜா, அருண், சிவக்குமார் மற்றும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடியியல் முனைவர் மணி மாறன் , விழுப்புரம் பேராசிரியர் இரமேசு, பூ.சா.கோ கல்வெட்டியல் மற்றும் தமிழ் முன்னாள் முனைவர் இரவி, மூத்த தொல்லியல் ஆய்வாளர் வேலுதரண் ஆகியோரும் இணைந்து ஆலோசித்து, இப்படியொரு பயிலரங்கை வாட்ச் அப்பில் நடத்த முடிவெடுத்தனர்.
கரோனா முழு அடைப்பு காரணமாக ஓய்வில் இருந்து வீணாகப் பொழுது போக்குவதை விட, ஒரு கல்வெட்டியல் சார்ந்த பயிலரங்கை நடத்துவது பயனுள்ளதாக அமையும் என்பதால்தான் இப்படியொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்பயிலரங்கில் பங்கேற்கும் அறிஞர்களையும், பங்கேற்க விரும்பும் மாணவர்களையும் முடியரசு ஒருங்கிணைத்தார். இதைத் தொடர்ந்து சிற்பம் அறிவோம் என்ற தலைப்பில் பயிலரங்கை பூ.சா.கோ கல்லூரி முன்னாள் மாணவர்களான முடியரசும் உதயசங்கரும் வடிவமைத்து நடத்தி வருகின்றனர். அவர்கள் தரும் சிற்பக்கலை பற்றிய சுவையான தகவல்கள், பலரையும் வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் மட்டுமே இந்த பயிலரங்கு மூலமாக முந்நூறுக்கும் அதிகமானோர் பங்கேற்றுப் பலன் பெற்றுள்ளனர். டென்மார்க் தமிழ் ஆர்வலர் முல்லை நாச்சியார், இலங்கை வரலாற்று ஆய்வாளர் ஹோபிநாத் மற்றும் சிங்கப்பூர் தமிழ் வரலாற்று ஆர்வலர்களும் இந்த வாட்சப் பயிலரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மனிதனின் பெருங் கற்கால நாகரீகத்தைச் சொல்லும் சிற்பங்கள் முதல் இன்றைய நவீன சிற்பங்கள் வரையிலான பாடங்கள், பயிலரங்க மாணவர்கள், இதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருவதாக தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_330.gif)