Advertisment

தரையில் கொட்டப்பட்ட பால்... விற்பனை இல்லை என வேதனை  

Advertisment

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவினால் தமிழகத்தில் பால் விற்பனை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 144 தடை காரணமாக 'டீ' கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உணவங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்று உள்ளதால் பால் விற்பனை சரிவை சந்தித்துள்ளது..

சென்னையில் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருபவர்கள் பால் விற்பனையாகவில்லை என்று கறந்த பாலைத் தரையில் ஊற்றினர். தற்போது உள்ள நிலையில் மாடுகளுக்குத் தீவனம் வாங்கக் கூட முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். மேலும் இந்த நேரத்தில் தங்களிடம் இருந்து அரசு பாலைக் கொள்முதல் செய்யலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போதைய தடை உத்தரவு காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamilnadu sales milk corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe