இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 536 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 11,760 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் நேற்று 78 லிருந்து 81 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனாவுக்கு 'Arsenicam album 30' என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்ததமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. 'Arsenicam album 30' என்ற மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்ததை அடுத்து தமிழகத்தில் ஹோமியோபதி மருந்தை செயல்படுத்துவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.