ADVERTISEMENT

100 நாள் வேலைத்திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி!!!

05:29 PM Apr 23, 2020 | Anonymous (not verified)

இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு செய்ய மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முடிவு எடுக்க குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT



இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகள் குறித்த அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்குவதற்கும், 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நீர்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள், மின்சார பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் அனுமதி கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT