Advertisment

தொடர்ந்து பயணமாகும் புலம் பெயர் தோழர்கள்...

 corona virus - lockdown - External state workers issue

கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. இதில் பெரும் துயரம் என்பது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தான், வேலை வாய்ப்பு இன்றி உணவுக்கே தவித்து வந்தனர். வேறு வழியில்லாமல் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல முடிவெடுத்து தாய்மண்னை நோக்கி நாடு முழுக்க நடக்க தொடங்கினார்கள். இந்த மனிதத் துயரத்தை எதிர்க்கட்சிகளும் நீதிமன்றங்களும் வேதனையோடு கேள்வி எழுப்பியது. பிறகு இறங்கி வந்த ஆளும் அரசுகள் அவர்கள் சொந்த மாநிலம் செல்ல சிறப்பு ரயில்களை விடுவதாகக் கூறி தொடர்ந்து ரயில்களை இயக்கிவருகிறது.

Advertisment

நாடு முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் விபரத்துடன் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதே போல் தான் ஈரோட்டிலும், பல்வேறு கட்டங்களாக சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு குடிநீர் பிஸ்கட் பாக்கெட் போன்றவையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 8 ஆம்தேதி மாலை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 400 பேர் சிறப்பு ரயில் மூலம் அவர்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்காக அனைவரும் ஈரோடு மாநகராட்சி மண்டபம் வந்தனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரும் 8ஆம்தேதி மாலை சிறப்பு ரயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டனர். 75 நாட்களைக் கடந்தும் டிஜிட்டல் இந்தியாவில்(?) இந்த மனித அவலம் வேதனையுடன் நிகழ்ந்து வருகிறது.

Advertisment

corona virus covid 19 lockdown
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe