ADVERTISEMENT

மது கிடைக்காத ஏக்கத்தில் 7 பேர் தற்கொலை... முதல்வர் அதிர்ச்சி...

08:02 AM Mar 31, 2020 | rajavel

ADVERTISEMENT

மது பாட்டில்களில் நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு எனக் குறிப்பிட்டு இருந்தாலும் இந்த சமுதாயத்தில் மது என்பது ஒரு பிரதான பொருளாக மாறிவிட்டது. வீட்டு விசேஷங்களில் தொடங்கி சமுதாயத்தில் நடக்கும் நல்லது கெட்டது என எதுவாக இருந்தாலும் அங்கு மது என்பது மது பிரியர்கள் மத்தியில் முக்கியப் பங்காக உள்ளது.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட சூழலில் நாட்டையே அச்சுறுத்தும் கரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாத்து கொள்ள கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முமுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. இதில் அத்தியாவசிய பொருட்கள் தவிர மதுக் கடைகள் உட்பட குறிப்பிட்ட சில அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன. இதில் மதுக் கடைகள் மூடுவதற்கு முன் மதுபிரியர்கள் ஒரு நாள் இரண்டு நாள் தேவைக்கு மட்டும் வாங்கி வைக்க முடிந்தது.


தற்போது ஊரடங்கு ஏப்ரல் 14-ம் தேதியோடு முடியுமா? அல்லது தொடருமா? என்ற கேள்வி மற்றவா்களை விட மதுபிரியா்கள் தான் அதிகம் கேட்கிறார்கள். அதோடு மது அருந்த முடியாத ஏக்கத்திலும் குடிமகன்கள் தவிக்கிறார்கள். இந்த நிலையில் தான் மது குடிக்க முடியாத ஏக்கத்தில் கேரளாவில் 29-ம் தேதி ஒரே நாளில் 5 போ் தற்கொலை செய்து கொண்டனா். இது கேரளாவில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியது.




இந்த நிலையில் மேலும் 30-ம் தேதி காயங்குளம் புத்துபள்ளியைச் சோ்ந்த ரமேஷ்(40) மற்றும் திருச்சூா் ஆராட்டு கடவைச் சோ்ந்த ஷைபு (47) இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனா். இச்சம்பவம் கேரளா மக்களை மட்டுமல்ல முதல்வா் பினராய் விஜயனையும் அதிர்ச்சியடைய வத்துள்ளது.


இதற்கிடையில் பத்திரிகையாளா்களைச் சந்தித்த பினராய் விஜயன், மது அருந்த முடியாததால் சில தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது. அது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. இதனால் மதுவுக்கு அடிமையானவா்கள் மருத்துவா் பரிந்துரையின்படி மதுபானம் வாங்க கலால் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.



இதற்கு கேரளா மருத்துவா்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து மதுபானம் வழங்குவது அறிவியல் பூா்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மதுபானத்திற்கு ஒரு மருந்து வழங்க மருத்துவா்களுக்கு சட்டப்பூா்வ கடமை கிடையாது. மதுபானத்தை அருந்துமாறு மருத்துவா்கள் பரிந்துரைத்தால் மருத்துவம் பார்ப்பதற்கான உரிமம் ரத்தாகி விடும் என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனா்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT