தமிழகம் முழுவதும் கரோனோ தொற்று பரவுவதற்கு சென்னை மிக முக்கியான காரணமாக மாறிவருகிறது. காரணம் சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கில் கரோனோ தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சென்றவர்கள்மற்றும் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சென்றவர்களால் தற்போது கரோனோ பரவி வருகிறது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
அந்த வகையில் கரூரில் நகராட்சி அலுவலர் உட்பட 5 பேருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதுபெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றும் ஒருவர் மற்றும் அலுவலர் என இரண்டு பேருக்கு கரோனோ இருப்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் துறைரீதியானகூட்டத்தில் கலந்துகொள்ள,சென்னை நகராட்சி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று திரும்பினர். சென்னையில் கரோனோ அதிகமாக இருப்பதால் இவர்கள் இருவருக்கும் கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
அதில் இருவருக்கும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுதவிர கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் இன்றுஒரேநாளில் 5 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதால் கரூர் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.