Advertisment

அரசு மருத்துவமனையில் இருந்து எஸ்கேப் - வீட்டில் இருந்தவரை மீண்டும் அழைத்து வந்த போலீஸ் 

திருச்சி திருவெறும்பூர் பகுதி பகவதிபுரம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.ஆனால் அவருக்குக் கரோனா பரிசோதனை முடிவு வரவில்லை.

Advertisment

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தவர்களை இரவு கணக்கெடுப்பு நடத்தியபோது ஒருவர் காணமல் போனது தெரிய வந்தது.உடனே உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியுள்ளனர்.தகவலின் பேரில் வந்த சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கணக்கு எடுத்து கண்டுபிடித்த போது அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

Tiruchirappalli

காணாமல் போனவர் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்து உடனடியாகத் திருவெறும்பூர் போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். உடனே திருவெறும்பூர் போலிஸ் பகவதிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்த போது அவர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

அவரை மீண்டும் பிடித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஏன் மருத்துவமனையை விட்டு ஓடினார் என்பது குறி்த்து விசாரித்த போது மருத்துவமனையில் கொடுக்கும் சாப்பாடு சரியில்லை என்பதால் வீட்டுக்குப் போனதாக வாக்குமூலம் கொடுத்தார்.

corona virus Government Hospital Tiruchirappalli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe