Advertisment

உணவு பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தில் 5 பேருக்கு கரோனோ தொற்று! 

corona virus issue - trichi

கரோனா நோய்த்தொற்று காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் 72 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

சென்னையில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்த 282 பேரை சோதனை செய்ததில் 278 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை. மீதமுள்ள 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே குடும்ப உறுப்பினர்கள் 5 பேருக்கு பரவியுள்ளது என்பது தற்போது அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

தற்போது திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த 9 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், ரயில்வே முகாமில் ஒருவரும், தேனி மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் பெற்றோர் சென்னையில் இருக்கிறார்கள். அந்த அதிகாரியின் வீடு திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ளது. சமீபத்தில் சென்னையில் இருந்து தன் தாய், தந்தை ஆகியோரை திருச்சி வீட்டிற்கு வரவழைத்திருந்தார்.

சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பதால் தாய், தந்தை என இரண்டு பேருக்கும் கரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு பேருக்கும் கரோனா தொற்று உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர்கள் வீட்டில் இருந்த அந்த அதிகாரி, மற்றும் மனைவி, குழந்தைகளுக்கு பரிசோதனை செய்தனர். அவர்களுக்கும் நோய்த் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த அதிகாரியின் தனது வீட்டை 3 குடும்பத்தினர்களுக்கு வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு அதிகாரியின் குடும்பத்தில் 5 பேருக்கு கரோனோ தொற்று பரவியுள்ள நிலையில் அவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் செல்வது யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக வீட்டில் இருந்து காரிலே ரோட்டிற்கு அழைத்து வந்து அதன் பிறகு ஆம்புலன்சில் அழைத்து சென்றிருக்கிறார்கள்.

http://onelink.to/nknapp

அதிகாரியின் குடும்பத்திற்கு கரோனோ நோய்த் தொற்று பரவியுள்ளது என்பதற்காகச் சுற்றி உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி அந்த ஏரியாவின் பாதைகளை அடைக்காமல், அந்தப் பகுதியில் மக்களுக்குத் தெரியாமல் அழைத்து வருவது சரியா எனக் கேள்வி எழுப்புள்ளனர் சமூக ஆர்வலர்கள். இருப்பினும் இந்தத் தகவல் வெளியே கசிந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.

Trichi issue corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe