Advertisment

கரோனா விழிப்புணர்வான திருமணம்!

tirunelveli

கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்ற நிலையில், நோயைக் கொண்டாடுங்கள் எனத் தனது திருமணத்தையே கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாற்றிக் காட்டியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர்.

Advertisment

உலகையே அச்சுறுத்தி தினந்தோறும் உயிர்ப்பலி எண்ணிக்கையை அதிகரித்து செல்கின்றது கரோனா வைரஸ் தொற்று. இதற்காக உலகெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின் தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் கரோனாவின் வீரியம் குறையாததால் கரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என மறைமுக பிரச்சாரத்தையும் கையிலெடுத்தது மத்திய அரசு.

Advertisment

இந்நிலையில், திருநெல்வேலி காந்தி நகரினை சேர்ந்த திலீபன், லெட்சுமி தங்களது திருமணத்தையே கரோனாவிற்கு எதிரான பிரச்சார மற்றும் விழிப்புணர்வு மேடையாக்கினர். அரசின் வழிக்காட்டுதலின் படி குறைந்த அளவே கலந்து கொண்ட இத்திருமணத்தில், கலந்து கொண்ட அனைவருக்கும் "மதங்கள் மாறினாலும் நோக்கம் என்பது ஒன்றுதான்! இயற்கையைக் காக்க ஒவ்வொருவரும் தத்தமது வகையில் பல இடங்களில் முயற்சிகளை மேற்கொள்ளும் காரணமாகத்தான் மழை தவறாது பொழிகிறது என்ற வார்த்தையின் படி அனைவரும் இயற்கையைக் காக்க முன்வர வேண்டுமென்று மரக்கன்று ஒன்றை வழங்கியும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் எழுதிய நோயைக் கொண்டாடுங்கள் புத்தகத்தினையும், மாஸ்க்கையும் வழங்கி கரோனா விழிப்புணர்வையும், இயற்கை நேசிப்பையும் நூதனமாக வழங்கினர் தம்பதியினர்.

Tirunelveli corona virus Wedding
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe