ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் என்று 144 தடையை மீறி முகக் கவசம் கூட இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் வெளியே சுற்றித் திரிந்தவர்களை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் மார்ச் 27ந்தேதி தடுத்து நிறுத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1111111_110.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அவர்களிடம் இனிமேல் தேவை இல்லாமல் வெளியே சுற்ற மாட்டேன் என்ற உறுதிமொழியை சாலையின் நடுவே வாகனங்களோடு நிற்க வைத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர். அதன்பின்பு தங்களிடம் இருந்த முகக்கவசங்களை வழங்கி அவர்களை அணிய வைத்து, பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர். மேலும் இதேபோல் அடுத்தமுறை காரணமில்லாமல் வெளியே சுற்றினால் பிடித்து வழக்குப் பதிவு செய்யப்படும், அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தும் அனுப்பிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)