சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

Advertisment

 corona virus issue - Tamilnadu movie shooting Postpone - rk selvamani press meet

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தமிழகத்தில் இந்த வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் துபாய் வழியே விமானம் மூலமாக தமிழகம் வந்த 14 பேருக்கு கரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரோனா எதிரொலியால் தமிழகத்தில் மார்ச் 19ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.