சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

Advertisment

corona virus issue- TamilNadu Governor Request

இதற்கிடையில் நேற்று கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, "மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்போம்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கரோனாவை தடுக்க பிரதமர் மோடி கூறியதைப் போல நாளை மறுநாள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment