Advertisment

கரோனா பாதிப்பு அடுத்தடுத்து மூடப்படும் அரசு அலுவலகங்கள்!!

pudukkottai district

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு சென்றால்கூட அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறி அதற்கான சிகிச்சை தொடங்கி விடுகிறது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு மாதம் வரை பச்சை நிறத்தில் இருந்தாலும் அரிமளம் ஒன்றியத்தில் முதல் எண்ணிக்கையை தொடங்கி தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து 200 பேரை கரோனா தொற்று தொட உள்ளது. இதில் கடந்த சில நாட்களாக பொன்னமராவதி, விராலிமலை பகுதியில் அதிக தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில்தான் கடந்த மாதம் புதுக்கோட்டை நகரில் ஒரு வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வங்கி மூடப்பட்டது. பிறகு பல நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. அதேபோல கடந்த சில நாட்களில் மேலும் சில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.

அதாவது புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் அதிகாரி ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த அலுவலகம் மூடப்பட்டது. அடுத்து நேற்று வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால்அந்த அலுவலகமும் மூடப்பட்டது. இன்று செவ்வாய் கிழமை புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள மற்றொரு தனியார் வங்கி உதவி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இப்படி நாளுக்கு நாள் கரோனா தொற்ற அதிகரிக்கும் நிலையில், அலுவலர்களும் பாதிக்கப்பட்டு அலுவலகங்களும் மூடப்பட்டு வருகிறது.

corona PUDUKKOTTAI DISTRICT
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe