சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 206பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.|
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனோ தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காணொலியில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றுள்ளனர்.