corrr

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலையில் இயங்கி வருகிறது, மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து கழகம். இங்கு பணியாற்றி வரும் நாற்பது வயது மதிக்கத்தக்க நபருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து,தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதனால்தற்காலிகமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினி அடித்த பிறகு திறக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றி வந்த நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பரிசோதனை வாகனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்திருந்தது. இந்த அலுவலகத்தில் சுமார் 21 பேருக்கு மேல் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisment