ADVERTISEMENT

“ஏழைகளுக்கு சோறு போட்டது ஒரு தப்பா?” -வழக்கில் சிக்கிய இஸ்லாமியரின் ஆதங்கம்!

09:23 PM Mar 29, 2020 | Anonymous (not verified)

“நீங்க இதெல்லாம் பண்ணக்கூடாது. உங்க மேல தொடர்ந்து புகார் வருது. இன்ஸ்பெக்டர் கூப்பிடறாருன்னு சொல்லி, அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து எங்காளுங்க மூணுபேரை கூட்டிட்டு போனாங்க. மூணு பேரு மேலயும் தொற்றுநோய் பரப்புனதா கேஸ் போட்டு சொந்த ஜாமீன்ல விட்டுட்டாங்க.”

ADVERTISEMENT

ADVERTISEMENT



மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த அஸ்பக் அஸ்லம் என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேச, ‘அப்படி என்ன பண்ணுனீங்க?’ என்று கேட்டோம். “மதுரை பெரியாஸ்பத்திரில ரொம்பவும் உடம்புக்கு முடியாம இருந்த எங்க சொந்தக்காரர் ஒருத்தர நலம் விசாரிக்கிறதுக்காக 22-ஆம் தேதி நானும் என் அண்ணனும் போனோம். அங்கே பலரும் சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படறத பார்த்தோம். யாருகிட்டயும் நன்கொடை வாங்காம, எந்த உள்நோக்கமும் இல்லாம நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மொதல்ல 400 பேருக்கு எங்க கார் ஷெட்ல சாமியானா போட்டு லெமன் சாதம் ரெடி பண்ணுனோம். நாங்களா இதைக் கொண்டுபோயி கொடுத்து எதுவும் பிரச்சனை வந்துடக்கூடாதுன்னு, தமுமுக மூலமா பெரியாஸ்பத்திரில இருக்கிறவங்களுக்கு கொடுத்தோம். அடுத்த நாள் தக்காளி சாதம் 550 பேருக்கு கொடுத்தோம். அப்போது, மனவளர்ச்சி குன்றியோர், ரோட்டுல படுத்திருக்கவங்கன்னு பார்த்து பார்த்து கொடுத்தோம். அப்புறம் நெய் சாதம், புளியோதரைன்னு எங்களால முடிஞ்சத கொடுத்தோம். போலீஸ்காரங்களுக்கும் சாப்பாடு பொட்டலம், தண்ணீர் பாட்டிலெல்லாம் கொடுத்தோம். அது மட்டுமில்ல. ஹவுசிங் போர்டு ஃபுல்லா கிருமிநாசினி அடிச்சோம்.



ஊரடங்கு நேரத்துல நாங்க இப்படி மக்கள் சேவையில் ஈடுபடறது யாருக்கோ பிடிக்கல. ஏதோ சதி பண்ணிட்டாங்க. வசதியில்லாத மக்களுக்கு சாப்பாடு போட்டது ஒரு தப்பா? எங்க மேல வழக்கு போட்டிருக்காங்க. மனிதநேயத்தோடு பண்ணுற ஒரு நல்ல காரியத்தை மதரீதியா பார்க்கிறாங்க. அடுத்த மாதம் ரமலான் வருது. வருஷத்துக்கு ஒரு தடவை ரமலான் மாதத்துல, ஏழைகளுக்கும் வறியோருக்கும் ஜக்காத் என்ற தர்மம் கொடுப்பதை கட்டாயக் கடமையா நாங்க நிறைவேற்றி வர்றோம். எங்களோட வருமானத்துல ஒரு பகுதியை இதற்காக ஒதுக்குறோம். அந்த ஜக்காத்தை இந்த நேரத்துல பயன்படுத்தலாம்னு நெனச்சு பண்ணுன ஒரு விஷயத்தை போலீஸை வச்சு தடுத்துட்டாங்க.” என்றார் வேதனையுடன்.

நற்செயலும்கூட சட்டத்தின் பார்வையில் கெட்டதாக தெரிவதை என்னவென்று சொல்வது?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT