Advertisment

கரோனாவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்! - அரசின் கருத்தினை தெரிவிக்க உத்தரவு!

கரோனா நோய்த்தொற்றை தேசிய பேரிடராக அறிவித்து, சிறப்பு செயற்பாட்டுக்குழு அமைத்து, தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளைக்கு வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னைகிளைசெயலாளர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

 Corona virus issue - highcourt order

(1) கரோனா நோய்த்தொற்றை, தேசியப்பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டுக்குழு அமைத்து தேசிய நோய்தடுப்பு மைய வழிகாட்டுதலின்படி, பருண்மையாக செயல்திட்டம் வகுத்து கரோனா நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(2)கரோனா தோற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பார்க்கவேண்டும் என்ற அரசாணையை ரத்துசெய்து, இலவச சிகிச்சை வழங்க வேண்டும். இவ்வாறாக இரண்டு பொதுநல வழக்குகளை(W.P.7414 of 2020, W.P.7456 of 2020) தாக்கல் செய்துள்ளார்.

மேற்கண்ட 2 வழக்குகள் இன்று நீதிபதிகள் கிருபாகரன் & ஹேமலதா அமர்வில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசுதரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இம்மனுக்களின் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பான விவரங்கள் இருந்தால் தெரிவிக்கும்படியும் தெரிவித்தார்.

nakkheeran ad

Advertisment

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்தூய்மைபணியாளர்களுக்கு உரிய பிபிஇ (PPE) உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், வடசென்னை மற்றும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பொது சமையற்கூடம் அமைத்து உணவு வழங்கவும், சாலையோரங்களில் வசிக்கின்ற மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கு உத்தரவாதம் அளிக்கவும், 2 லட்ச வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சனை குறித்தும் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது. மேலும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், வட்டார அளவில் செயற்பாட்டு குழுக்கள் அமைத்து நிவாரணப்பணிகளைச் செய்யவும், இவற்றில் ஏற்கனவே அரசிடம் பதிவு செய்துள்ள 1100 மருத்துவர்கள், 3500 மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 45,000 தன்னார்வலர்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மேற்படி கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது பற்றி அரசுக்கு உத்தரவிடப்பட்டு, இதுகுறித்த அரசின் கருத்தினை தெரிவிக்க கூறி, வழக்கைஇருவாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

corona virus covid 19 highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe