Skip to main content

'எங்க நாட்டுக்கு அனுப்பிடுங்க' - ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

திருவண்ணாமலை நகரத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில், ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆஸ்ரமங்களின் மீதான ஈர்ப்பில் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மாதக்கணக்கில் தங்கி செல்வர்.

 

 Corona virus issue - Germany tourists Request

 



தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதும் அதாவது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் திருவண்ணாமலை வந்த 80 சதவித வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டுக்கு சென்றுவிடுவார்கள். தமிழகத்தில் குளிர்காலம் தொடங்கியதும் இங்கு வருவார்கள். மீதியுள்ள 20 சதவிதம் பேர் இங்கேயே இருப்பார்கள். விசா முடிந்ததும் தங்களது நாட்டுக்கு சென்று பின்னர் விசாவை நீட்டித்துக்கொண்டு இங்கு வந்துவிடுவார்கள்.

இந்நிலையில் சுமார் 200க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் திருவண்ணாமலை நகரில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் பற்றிய கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகம் நடத்தி, அவர்களை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் மார்ச் 28ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த 5 பேர் வந்தனர். மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் முன்பு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் மருத்துவர்கள். அவர்களுக்கு  நோய் தொற்று எதுவும்மில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் ஒரு கடிதத்தை ஆட்சியர் கந்தசாமியிடம் தந்தனர். அதில் இந்தியாவில் உள்ள ஜெர்மனி தூதரகத்துக்கு மின்னஞ்சல் செய்துள்ளனர். அதில் தாங்கள் தாய்நாட்டுக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் ஏற்பாடு செய்வதாக கூறி பதில் மின்னஞ்சல் செய்துள்ளனர். இதனை காட்டிய அவர்கள் எங்களை சென்னை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார்கள்.

தற்போது விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் இங்கேயே இருங்கள், உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறோம், பாதுகாப்பாக இருங்கள் எனச்சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை தந்து அனுப்பினார்.

அதிகாரிகளோ, இவர்களை உடனடியாக அனுப்ப முடியாது. அப்படி அனுப்ப வேண்டுமாயின் அவர்கள் நாட்டு தூதரகத்தில் இருந்து அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் எனக்கேட்டு மின்னஞ்சல் வந்து அரசு உத்தரவிட்டால் மட்டுமே எங்களால் அனுப்ப முடியும் என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tourist vehicle overturns on mountain road More than 10 people injured

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த 19 பேர் நேற்று மினி பேருந்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு ஏற்காட்டில் இருந்து சென்னை திரும்புவதற்காக இன்று மதியம் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்காடு மலையடிவாரத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே மினி பேருந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மினி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விபத்தில்  சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் ஏற்காடு மலையடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.