விழுப்புரம் மாவட்டத்தில் கரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி,தமிழக அரசின் கவனக் குறைவான நடவடிக்கையால் தான் கரோனா பாதிப்பு தமிழகத்தில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பு தொடர்பான சுகாதாரத்துறை வெளியிடும் அறிக்கையில் மாநகராட்சி ஒரு அறிக்கையும், அரசு ஒரு அறிக்கையையும் தருகிறது.
எனவே இது உண்மையில்லாத அறிக்கையாகவே உள்ளது. மேலும் தமிழக முதல்வர், மருத்துவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து கரோனா தொடர்பாக கருத்தரங்கு நடத்த முன்வர வேண்டும் என்றார்.