ADVERTISEMENT

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

08:24 PM Mar 28, 2020 | Anonymous (not verified)

கரோனா பாதிப்பு காரணமாக கடலூர் நகரில் இன்று மாலை ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியியை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புசெல்வன் பார்வையிட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புச்செல்வன், "மாவட்டத்தில் 3090 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளார்கள். அவர்கள் கண்காணிப்பட்டு வருகின்றனர். இதில் இதுவரை 1250 வீடுகள் தனிமை படுத்தப்பட்டு உள்ளன. மீதம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று (27.03.2020) மாலை 5 மணி வரை கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனம் ஓட்டிவந்தவர்கள், சாலையில் தேவையில்லாமல், பொறுப்பற்ற முறையில் சுற்றி திரிந்தவர்கள் என 92 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 320 நபர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 99 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவினை பின்பற்ற வேண்டும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அரசு மருத்துவ கல்லூரியில்‌ 440 படுக்கை அறைகள் கூடிய கரோனா வார்டு தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT