ADVERTISEMENT

உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம்! -தலைமை நீதிபதி வேண்டுகோள்!

10:20 PM Mar 20, 2020 | Anonymous (not verified)

கரோனா அச்சுறுத்தலால் உயர்நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம் என தலைமை நீதிபதி ஏ.பி சாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அதில், உலக நாடுகளில் பரவிவரும் கரோனா வைரசுக்கு அவசர ஆய்வு தேவைப்படுகிறது. இதற்கு முன் நாம் பார்த்திராத, எந்த ஒரு மருத்துவத் தீர்வும் இல்லாத இந்த நோய், மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. மக்கள் ஒன்றாகக் கூடாமல் இருப்பது கடினமாக இருந்தாலும், இந்த இக்கட்டான சூழலில் இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. கூட்டமாக இல்லாமல் இருப்பதும், பிறரிடம் இருந்து தள்ளியிருப்பதும்தான் இதற்குத் தீர்வு என்பதால், உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் கூட வேண்டாம். நம்மை மட்டுமல்லாது, மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இத்தகைய நெருக்கடியானது சமூகத்தின் கட்டாயம் ஆகும். இதை ஒற்றுமையுடன் அனைவரும் கடமையாக ஏற்க வேண்டும். இது ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT