Advertisment

கரோனா தொற்று காரணமாக +2 விடைத்தாள் திருத்தும் பணி ஆன்லைனில் நடைபெறுமா?

கரோனா அச்சத்தில் இருக்கும் தமிழக மக்களுக்கு வருகின்ற திங்கள் அன்று தமிழக முதல்வர் விளக்கம் கொடுக்க இருக்கிறார். அதில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வரும் +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் பற்றிய அறிவிப்பையும் வெளியிடயுள்ளார்.

Advertisment

+2 exam

தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். முன்பெல்லாம் +2 வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியானது மாவட்டம் தோறும் 5 மையம் அமைத்து அதில் ஒட்டுமொத்தபாடப் பிரிவையும் திருத்தும் பணி நடைபெறும். தற்போது கரோனா அச்சத்தில் பாதுகாப்பு கருதி இடைவெளி தேவைப்படும் சூழ்நிலையில், ஒட்டு மொத்தமாக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் மூலமாக விடைத்தாள் திருத்தும் பணி வாய்ப்பு இருக்குமா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது .

Advertisment

இதுதொடர்பாக ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திட ஏதுவாக விடைத்தாள்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு இல்லாதபட்சத்தில், குறிப்பிட்ட விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைத்து திருத்துவதைத் தவிர்த்து ஆசிரியர்களின் பாதுகாப்புகருதி அந்தந்த மாவட்டங்களில்திருத்தும் மையங்களை அதிகரித்தும் போக்குவரத்து வசதியில்லாமையும் கருத்தில் கொண்டும் விடைத்தாள் திருத்தும் மையங்களை அமைத்திட வேண்டுகிறேன். இதுவரை ஒரே மையத்தில் நூற்றுகணக்கான ஆசிரியர்கள் எல்லா பாடத்திற்காகவும் திருத்துவதால் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. தற்போது கரோனா பரவல் எதிரொலியால் இம்முறை 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்கள் பாட வாரியாக அமைத்திட்டால் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அமைந்திடும் என்றார்.

+2 exams corona virus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe