தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருப்பவர் பொள்ளாச்சி ஜெயராமன்.அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூடவே இருந்தார்.
அவருக்கு நேற்று கரோனோ டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு அந்த அறிகுறிகள் இருக்குமோ என்று மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து முடிவுகள் வரும் வரை அவரை தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த பாதுகாப்பு அதிகாரி மூலம், வேறு யாருக்கேனும் சமூகபரவல் நடந்திருக்குமா? என்கிற கோணத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். பொதுவாகவே ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டும், முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.