கரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவுவதைத்தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Advertisment

 Corona virus infection increases  in Tamil Nadu

இந்நிலையில் இன்று தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும், இதுவரை டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.