கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகவும், சமூக பரவலை தடுக்கும் விதமாகவும் வீடுதோறும் சென்று மலிவு விலை காய்கறி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார், குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா மற்றும் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டு, வீடுதோறும் சென்று காய்கறி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். அப்போது பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் சம்பந்தமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துக்கூறி, சமூக இடைவெளியை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.