கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளே அந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இருந்தபோதிலும், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisment

 corona virus impact - Tirupattur District Collector announcement

தமிழகம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் எதிரொலியாகவும், சமூக விலகலை தீவிரப்படுத்தும் விதமாகவும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் நேரத்தை தமிழக அரசு குறைத்தது. மேலும்பல கட்டுப்பாடுகளை விதித்தது. இந்நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது என்று அம்மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதியளித்துள்ளார்.