உலகம் கரோனா வைரஸ் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. மனித சமூகத்திற்கு சவால் விடும் அந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலகநாடுகள் திணறி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மே 3- ஆம் தேதி வரைஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_296.jpg)
இந்நிலையில் சென்னை, கோவை, சேலம், திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தமிழக அரசின் உத்தரவு படி இன்று அமலுக்கு வந்தது. கடலூர், திருவாரூர், சேலம், தென்காசி, விழுப்புரம், நாகை, தஞ்சை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மேலும் தாம்பரம், பல்லாவரம், ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், பொன்னேரியில் முழுமையான ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)