Advertisment

இதையெல்லாம் செலுத்த வேண்டாம்... மக்களுக்கு 3 மாதம் அவகாசம் அளித்த தமிழக அரசு...!

கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் 74 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

Advertisment

  Corona virus Impact - Tamil Nadu Government Announcement

இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவனைத் தொகை செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தவனைத் தொகை, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதிச் சான்றுகளை புதுப்பிப்பதற்கும், மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்துவதற்கும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

tn govt curfew corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe