Advertisment

ராணிப்பேட்டையில் 2500 பேர் சிகிச்சை பெற புதிய மருத்துவமனைகள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்காடு அடுத்த மேல்விசாரத்தில் அமைந்துள்ள அப்துல் அக்கீம் தனியார் பொறியியல் கல்லூரியை தற்காலிக மருத்துவமனை வளாகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

corona virus

அது தொடர்பாக அக்கல்லூரி கட்டிடங்களை ஆய்வு செய்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, 300 படுக்கையில் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக அங்குள்ள அறைகளைதயார் செய்ய சுகாதாரத் துறை, பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் சுமார் 2500 படுக்கைகள் கொண்டதனிமைப்படுத்தப்பட்ட அறைகளை பள்ளி, கல்லூரி, தனியார் அமைப்புகள் தந்த இடங்களில் அங்காங்கே அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 என்பது குறிப்பிடதக்கது.

Advertisment

corona virus covid 19 hospital ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe