தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ஊரடங்கு பிறப்பித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதற்கிடையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்களுக்கு தொடர்ந்து கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 120க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர்கள் இருவருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.