Advertisment

மதுரையில் சில பகுதிகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Advertisment

Corona virus Impact in Madurai

தமிழகத்தில் நேற்று திடிரென தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ல் இருந்து 124 ஆக அதிகரித்தது. நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கூறிய அவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளதாகவு்ம், இதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

நேற்று கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பகுதியில் இருந்து மக்கள் வெளிய வரவும் அந்த பகுதிக்குள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரை நரிமேடு, தபால் தந்தி நகர் பகுதிகளில் 4 நாட்கள் பொதுமக்கள் வெளியே வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

madurai covid 19 corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe