கரோனாவிலிருந்து மீண்டு வரும் ஈரோடு! இன்று மேலும் 28 பேர் டிஸ்சார்ஜ்!!!

கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது.

  corona virus impact in erode - Today 28 people discharged

இதற்கிடையில் தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை இன்று மாலை அறிவித்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது கரோனா பயத்தில் இருந்த ஈரோட்டு மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள இந்த 28 பேரும் 14 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

corona virus covid 19 Erode
இதையும் படியுங்கள்
Subscribe