Skip to main content

அதிவேகமாக பரவும் கரோனா! கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தும் அரசு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சி. கொத்தங்குடி ஊராட்சியில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நவீன கருவிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேணுகோபால் துவக்கிவைத்து கிருமி நாசினி மருந்துகளை அடித்தார்.

 

 corona virus impact -  antiseptic spraying process accelerated



சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு 50மீ தூரத்தில் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி உள்ளது. இங்கு  கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்த கோவை மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி, கொத்தங்குடி ஊராட்சியில் மாணவி தங்கியிருந்த முத்தையாநகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தடுப்புகட்டைகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்கள் வீட்டிற்கே சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.