கரோனா பீதி... தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் சரண்... அதிரடி காட்டிய நீதிபதி...!

திருச்சி கல்லூரி பேராசிரியை கடத்தல் வழக்கில் 6 மாதம் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக பொருளாளர், கரோனா வைரஸ் பீதியில் போலீசில் சரண் அடைந்து சிறைக்குச் சென்றார்.

corona virus Impact - ADMK Personality Surrenders issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வணக்கம் சோமு. அதிமுக பொருளாளராக இருந்த இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியை, இவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 தேதி நண்பர்களுடன் ஆம்புலன்ஸ் காரில் கடத்தினார். கடத்தல் தகவல் அறிந்து போலீசார் விரட்டிச் சென்றனர். திருச்சி - திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே அந்த பெண்ணை சாலையோரம் இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பியது.

இந்த வழக்கில் வணக்கம் சோமுவின் கூட்டாளிகள் தஞ்சையை சேர்ந்த அலெக்ஸ், விக்னேஸ்வரன், ஞானபிரகாஷம், ஜெயபால், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு, தலைமறைவாகவே இருந்தார். ஒரு தலைக்காதலால் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.

ஜாமீனுக்கா நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மனுதாக்கல் செய்துவந்தார். ஆனால் மனுகள் தள்ளுபடியான நிலையில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார்.

இது குறித்து போலீசார் கடந்த 6 மாதங்களாக கேரளா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருந்த சோமுவை பிடிக்க பல்வேறு முயற்சி செய்தும் அதிலிருந்து தப்பியோடினார். அவருக்கு அரசியல்வாதிகள் துணையாக இருந்ததால் இதுவரை தலைமறைவாக இருந்தார்.

நாடு முழுவதும் கரோனா பரவுவதால், எங்கையும் தலைமறைவாக இருக்க முடியவில்லை, ஓட்டல்களில் அறை எடுத்து தங்க முடியாநிலை ஏற்பட்டதால், இனி பதுங்க முடியாது என்று முடிவு செய்து சரண் அடைந்தார்.எனவே தற்போது சரணடைந்தால் கரோனாவை காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்து விடலாம் என்று நினைத்தார்.

சரண் அடைந்த வணக்கம் சோமு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். கேரளா, பெங்களூர் என்று சுற்றிதிருந்தவர் என்பதால் அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனோ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன்னுடைய அரசியல் பலத்தில் இது நாள் வரை தலைமறைவாக இருந்த வணக்கம் சோமு, கரோனோ பீதியில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற கதை தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

admk corona virus police Surrender
இதையும் படியுங்கள்
Subscribe