தெலங்கானா மாநிலத்தில் சிக்கியுள்ள, திண்டிவனம் பகுதியை சேர்ந்த 13 பேரை மீட்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

 corona virus impact - 13 Tamilnadu people trapped in Telangana

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியை சேர்ந்த பாலாஜி தலைமையில், 13 பேர் தெலங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டம், கொடங்கல் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா தேவஸ்தானத்திற்கு கடந்த 19ஆம் தேதி ரயில் மூலம் புறப்பட்டனர். 20ஆம் தேதி அங்கு பிரம்மோற்சவம் துவங்கிய நிலையில் 30 ஆம் தேதி முடிவுற்றது.

Advertisment

 corona virus impact - 13 Tamilnadu people trapped in Telangana

இதனையடுத்து அவர்கள் கடந்த 31ஆம் தேதி ரயிலில் திரும்புவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனால் அங்குள்ள 13 பேரும் தமிழ்நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது. அவர்கள் அங்குள்ள தேவஸ்தானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன் கடந்த 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் 13 பேரை மீட்கக் கோரி மனு அளித்தார். இவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வாட்ஸ்அப் மூலம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.