கரோனா பாதிப்பிற்கு நடுவே வாழை விவசாயிகளின் வாழ்க்கையில் வீசிய சூறாவளி காற்று!

கரோனா வைரஸ் தொற்று உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

corona virus-hurricane impact - banana farmers Worried

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவினால் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகளின் நிலைஇன்னும் மோசமாக உள்ளது. கடந்த ஆண்டு சாகுபடி செய்யபட்ட வாழைகள் தற்போது விளைந்து அறுவடை செய்யபோகும் தருவாயில், கரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டதால் வாழை விவசாயிகள் கவலையில் இருந்து வந்தனர். இதுஅரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வாகன போக்குவரத்து ஓரளவு சீரடைந்தாலும், கடந்த ஆண்டுகளை போல் கொள்முதலுக்கான வியாபாரிகள் அதிகம் போ் வராத காரணங்களால் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில்சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியில் கடந்த புதன்கிழமைதிடீரென சூறாவளி காற்றுடன்பெய்த ஆலங்கட்டி மழையால்,பல்லாயிரக்கணக்கான வாழைகள் முறிந்து பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு வாழை விவசாயிகள் இழப்பை ஈடு செய்யும் வகையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

corona virus covid 19 curfew Farmers
இதையும் படியுங்கள்
Subscribe