ஊட்டி டாக்டர் கரோனா தொற்றால் இறந்தாரா?

நீலகிரி மாவட்டம் தெங்கு மரஹடாவைச் சேர்ந்த டாக்டர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கரோனாதடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.இந்த நிலையில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.உடனே கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அட்மிட் செய்யப்பட்டார்.

666

கரோனாதொற்று பரவி இருக்கும் என்கிற கோணத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இப்போது திடீர் என இன்று அந்த டாக்டர் இறந்து விட்டார். ஆனால் கரோனாவால் அவர் இறக்கவில்லை. அவர் டெங்கு காய்ச்சலால் தான் இறந்தார் என அந்தத் தனியார் மருத்துவமனை தகவல் அனுப்பிக் கொண்டு இருக்கிறது.உயிரிழந்த அந்த டாக்டரின் உடல் இப்போது மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

corona virus Doctor hospital ooty
இதையும் படியுங்கள்
Subscribe