உலகம் முழுக்க நீயா நானா என மனித குலத்திற்கு சவால் விட்டு தனது அதிகார பரப்பை அதிகரித்து வருகிறது கரோனா வைரஸ்.

Advertisment

Corona virus hair style

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

துன்பம் வந்தால் சிரிங்க என்ற பழமொழிக்கேற்ப, இந்த தொற்று நோயான கரோனா வைரஸையும் பல வடிவங்களில் வெளிக்காட்ட தொடங்கிவிட்டனர் மக்கள். சினிமா நடிகர்கள் அணியும் உடைகள், அவர்களின் ஹேர் ஸ்டைல் போன்றவைகளை பின்பற்றி தங்களையும் அந்த நடிகர் ரேஞ்சில் காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம் உள்ள ரசிகர்கள், தற்போது கரோனா வைரஸையும் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனது மகனை சலூன் கடைக்கு கூட்டி சென்ற ஒருவர், நான் சொல்வது போல் முடி வெட்டு என சலூன் கடைக்காரரிடம் சொல்ல, அவரும் அதுபோலவே முடி வெட்ட தொடங்கினார். முடி வெட்டி முடித்து இறுதியில் பார்த்தால் அது மருத்துவர்கள் தற்போது காட்டிவரும் கரோனா வைரஸ் போன்ற படம்.

கரோனா வைரஸிடமிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அந்த வைரஸ் தாக்கினால் உடனே உயிரிழப்பு என யாரும் அஞ்ச கூடாது என்ற விழிப்புணர்வுக்காகவே தன் மகன் தலைமுடியை கரோனா வைரஸ் படம் போல் வெட்டியதாக அவர் கூறியிருக்கிறார்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... தற்போது இது எல்லாமே பேஷனாகி விட்டது. இதுதான் இடுக்கண் வருங்கால் நகுக என்பதோ..?