சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Corona Virus - Group 4 exam counseling Postponed

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கரோனா பாதிப்பு எதிரொலியால் குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கலந்தாய்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.