ADVERTISEMENT

கரோனா பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கு அறிவித்த நிவாரணம் வழங்க 'தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்' கோரிக்கை!

03:19 PM Jun 13, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT


கரோனா நோய்ப் பரவல் பணியின்போது இறந்துபோன அரசு அலுவலர்களுக்கு அரசு அறிவித்த ஐம்பது லட்சம் ரூபாய் பணம், அவர்கள் வாரிசுகளுக்குப் பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

ADVERTISEMENT


இந்த ஒன்றியத்தின் மாநில உயர்நிலைக் கூட்டம் மாநிலத் தலைவர் சண்முகராஜன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்துள்ளது. அப்போது கரோனா நோய்த் தடுப்புப் பணியின்போது நோய்த் தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும், மேலும் முதல்வர் பொது நிவாரண நிதி 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். எதிர்பாராதவிதமாக இறப்பு நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இறந்தவர் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனக் கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் அறிவித்துள்ளார்.

கரோனா பணியில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் சொர்ணா பாய், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் சவுண்டையா, கடலூர் மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேஷ், திருச்சி மாவட்ட வருவாய் ஆய்வாளர் சேகர் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உதவியாளர் தினகரன், சென்னை சம்பளம் மற்றும் கணக்கு துறை அலுவலகத்தில் முதுநிலை கண்காணிப்பாளராக இருந்த பிரிசில்லா லாரன்ஸ் உட்பட இப்படி 13 மூன்றுக்கும் மேற்பட்டோர் பணியின்போது கரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர்.


இவர்கள் குடும்பத்திற்கு அரசு அறிவித்த 50 லட்ச ரூபாய் நிதி. இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இறந்துபோன குடும்ப வாரிசுகளுக்கு உதவித்தொகையும் பணி நியமன ஆணையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கூறியது போல உரிய தொகையையும் அரசு பணியையும் இறந்துபோன குடும்பங்களுக்கு எப்போது வழங்குவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT