ADVERTISEMENT

கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி... தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை அனுப்பிய பள்ளி மாணவி!

08:12 AM Mar 31, 2020 | santhoshb@nakk…


கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்கலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இணையத்தளம் மூலம் பொதுமக்கள் எளிமையாகப் பணம் அனுப்பும் வகையில் வங்கிக் கணக்கு விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் பிரதமர் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர்.

ADVERTISEMENT


இதனைத் தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் ஊராட்சியில் பள்ளி மாணவி கௌசிகா என்பவர் தான் சிறிது சிறிதாகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூபாய் 1,555-யை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையத்தளம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அந்த மாணவியைச் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT