Skip to main content

மக்களின் தேவைக்கேற்ப உணவு பொருட்கள் உள்ளதா? ஈரோடு எஸ்.பி.ஆய்வு!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நானே வல்லரசு என்று மார்தட்டிய அமெரிக்கா முதல், முன்பு இந்தியாவை தனது காலனி ஆதிக்கத்தில் அடிமைப்படுத்திய இங்கிலாந்து வரை தனது கோர முகத்தை காட்டி உயிர்களை பறித்து வருகிறது கரோனா.

 

 corona virus - food products issue - Erode sp  inspection  corona virus - food products issue - Erode sp  inspection



இதில் இந்தியா மிகப்பெரிய எச்சரிக்கையுடன் தனது அனைத்து நகர்வுகளையும் நடத்திவருகிறது. உலக அளவில் இந்த வைரஸ் தாக்கம் சமூக பரவலாக தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் அது நிகழவில்லை. அதற்கு காரணம் மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் இதில் தீவிரமான கவனம் செலுத்தி வந்ததுதான். குறிப்பாக தமிழகத்தில் இதன் தாக்கம் தொடங்கியவுடன் மாநில அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் மிகுந்த கவனத்துடன் இதை எதிர் கொண்டார்கள். 

ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் இந்த வைரஸ் தொற்றை எதிர்த்து ஒரு போராக நடத்திவருகிறது. ஆகவேதான் தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் கூடினாலும் பாதிப்பில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு இந்த வைரஸ் தொற்று வந்ததற்கான காரணம் வெளி மாநிலம் சென்று வந்தவர்களும், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர்களும்தான்.  இதை மாவட்ட நிர்வாகம் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்ததால் அதற்குத் தேவையான எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து பணியாற்றியது.
 

nakkheeran app



இந்த வைரஸ் தொற்று மக்களிடம் பரவாமல் இருக்க அதற்குத் தேவையான நடவடிக்கைகளை இரு துறைகளும் செய்து வந்தன. இதன் காரணமாகவே தொடக்கத்தில் வந்த எண்ணிக்கையைப் போல் தற்போதும் அது கூடாமல் குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் 32 பேர் என்ற அளவிலேயே தற்போதும் நீடித்து வருகிறது. இதில் பலபேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் சிலர் குணமான நிலையிலும் மருத்துவமனையில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு உள்ளது. இதற்கிடையில் ஈரோடு மாவட்ட மக்கள் உணவுப் பொருள்கள் தங்களுக்குத் தேவையானதை வாங்குவதற்கு இந்த மாவட்டத்திலுள்ள விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளதா என சோதித்துப் பார்ப்பதற்காக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், இன்று ஈரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் மொத்த வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்துள்ளார்.

இந்த ஆய்வு நடவடிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீடித்தால், மக்களின் தேவைகளுக்கு உணவுப் பொருட்கள் இங்கு இருப்பு உள்ளதா, இல்லை வேறு பகுதியிலிருந்து வரவழைக்க வேண்டுமா என்பதற்கான ஆய்வுதான் இது என்கிறார்கள் அதிகாரிகள். மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதையே அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என்று அரசு பணியாளர்கள் கூறுகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.